தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க வழக்கு! – நிராகரித்த உயர்நீதிமன்றம்!
உத்தர பிரதேசத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்ட பெண்கள் இருவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் 22 மற்றும் 23 வயதான இரு பெண்கள் கல்லூரி காலம் முதலாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். பின்னாளில் இது காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காத நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணின் வீட்டார் மற்றொரு பெண் தங்கள் மகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மீட்டுத்தர கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆஜரான இரு பெண்களும் தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடினர். ஆனால் எதிர்தரப்பு பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது இந்து சம்பிரதாய முறைகளில் கிடையாது என வாதிட்ட நிலையில் அவர்களது திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.