திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மே 2021 (13:24 IST)

வாய்ப்பாடு கூட தெரியல.. எதுக்கு உனக்கு கல்யாணம்? – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உத்தர பிரதேசத்தில் நடக்கவிருந்த திருமணம் ஒன்றில் மணமகனுக்கு வாய்ப்பாடு தெரியாததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டாலும் கடைசி நேரத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் திருமணத்தையே மாற்றி விடும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெறுகின்றன. பல்வேறு திருமண சம்பவங்களில் வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்துவது, காதல் சம்பவங்களால் திருமணம் நின்று போவது போன்ற திடீர் திருப்பங்கள் நடைபெறுவது உண்டு.

ஆனால் உத்தரபிரதேசத்தில் ஒரு காரணத்தால் திருமணம் நின்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மஹோபா பகுதியில் பெரியோர்கள் நிச்சயித்த திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அப்போது மணமகனிடம் இரண்டாம் வாய்ப்பாடு கேட்க சொல்ல தெரியாமல் விழி பிதுங்கியுள்ளார் மணமகன். இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணமகள். வாய்ப்பாடு தெரியாததால் திருமணம் நின்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.