அமெரிக்கா பங்களிப்பில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு துறையின் உபகரணங்கள்: பெங்களூரில் கண்காட்சி!

அமெரிக்கா பங்களிப்பில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு துறையின் உபகரணங்கள்: பெங்களூரில் கண்காட்சி!


Caston| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (17:50 IST)
பாதுகாப்புத்துறையில் இந்தியா அமெரிக்கா ஒத்துழைப்பு என்பது இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துகிறது. அமெரிக்கா தனது முக்கியமான ராணுவ கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியாவை அங்கீகரிக்கிறது.

 


அமெரிக்கா தனது நெருக்கமான கூட்டு நாடுகளோடு பகிர்ந்துகொள்ளும் தொழில்நுட்ப தகவல்களை இந்தியாவோடும் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளது. இந்தியா தனது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி இருநாடுகளும் உபயோகிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை எந்த உரிமமும் இல்லாமல் இந்தியா பெற முடியும்.


 


இந்தியாவின் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமெரிக்கா அமைத்து அவற்றை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முனைப்பில் உள்ளது அரசு.


 


இதனை ஊக்குவிப்பதற்காக பெங்களூரில் உள்ள எலஹங்கா விமான நிலையத்தில் மாபெரும் கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளனர். இந்த கண்காட்சி ஏரோ இந்தியா 2017 என்ற பெயரில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா பங்களிப்போடு, பாதுகாப்பு மற்றும் உள்துறை உபகரணங்களை இந்தியாவின் தயாரித்து உலக அளவில் அதனை சந்தைப்படுத்தும் இந்த முயற்சி இந்தியா அமெரிக்கா உறவில் புதிய மைல் கல்லாக அமையும் என கூறப்படுகிறது.


 


டெல்லியில் உள்ள அமெரிக்க தூதகரத்தை சேர்ந்த மேரிகே கார்ல்சன் இந்த கண்காட்சியினை  துவக்கி வைத்து உரையாற்றி விழாவினை சிறப்பித்தார்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :