வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (10:27 IST)

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்! தேதி அறிவிப்பு..!

அமெரிக்கா அதிபர் ஜோபைடன் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் ஜி 20 நாடுகளின்  கூட்டம் நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஜி 20 தலைமையை இந்தியா பொறுப்பேற்ற நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்தியாவுக்கு வர உள்ளார் என்றும் செப்டம்பர் பத்தாம் தேதி வரை ஜோபைடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடியுடன்  இருநாட்டு கூட்டு முயற்சிகள் குறித்து ஜோபைடன் ஆலோசனை செய்ய உள்ளார்.  
 
மேலும் உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர், இந்தியா அமெரிக்கா ஆகிய  இருநாட்டின் பொருளாதார தாக்கங்கள் ஆகியவை குறித்தும் இரு தலைவர்கள் பேச உள்ளனர். 
 
அமெரிக்க அதிபரின் வருகையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran