1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (08:52 IST)

எல்லையில் அத்துமீறும் சீனா; இந்தியா வந்த மைக் பாம்பியோ! – முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

இந்திய எல்லையில் சீன படைகள் அத்துமீறும் சம்பவங்கள் தொடரும் நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வந்துள்ளார்.

ஆண்டுதோறும் அமெரிக்க – இந்திய வெளியுறவு துறை கலந்து கொண்டு இருநாட்டு உறவுநிலைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் “2 ப்ளஸ் 2” கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு நிலை, ராணுவ சேட்டிலைட் தரவுகளை பகிர்வது, ஆயுத உற்பத்தி ஆகியவை குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது சீனாவுடன் இந்தியாவிற்கு எல்லை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அமெரிக்காவின் உதவி பெறுவது குறித்தும் பேசப்படலாம் என கூறப்படுகிறது.