செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (13:58 IST)

நெதர்லாந்து பெண்ணை திருமணம் செய்த உ.பி., இளைஞர்!

dutch girlfriend- harthick
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்   நெதர்லாந்து பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்த்திக் வர்மா(32). இவர் நெதர்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்றார்.

அங்குள்ள  மருந்து நிறுவனம் ஒன்றில் அவருக்கு மேற்பார்வையாளராக  வேலை கிடைத்தது. இதே நிறுவனத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த கெப்ரில்லா என்ற இளம்பெண்ணும் பணியாற்றி வந்தார்.  அப்போது,ஹர்த்திப் வர்மாவுக்கும், கெப்ரில்லாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது  காதலாக மாறிய பின், இருவரும் இணைந்து லிவிங் டுகெதர் முறையில் வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நெதர்லாந்தில் இருந்து தனது காதலி கெப்ரில்லாவுடன் ஹர்த்திக் இந்தியா வந்தார். ஹர்த்திக் குடும்பத்தினர் இருவரையும் வர்வேற்ற நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.