வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Alagesan
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (14:09 IST)

ராகுல் காந்தியை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் - பெண் தொண்டர் பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காதலிக்கிறேன் அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதாக காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவர் பேட்டி அளித்திருக்கிறார். 


 
 
சினிமா நடிகர்களை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என சில நடிகர்களை அடையாளம் காட்டி சிலர் பேசுவது உண்டு. இப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்று உ.பி. பெண் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். 
 
சமீபத்தில் பெண் ஒருவர் பேட்டி அளிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் பேட்டி அளிக்கும் பெண் என்னை ராகுல் காந்தி திருமணம் செய்யவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தியால் வசீகரிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத இந்த பெண் கங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே இந்த பேட்டியை அளித்து உள்ளார், மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். 
 
கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே ராகுல் காந்தியுடன் திருமணம் என்பதை பேசி வந்ததாகவும், திருமணம் நடக்கும் என நம்பியதாகவும் கூறிஉள்ளார். ஆனால் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னர் எனது நம்பிக்கை சிறிது, சிறிதாக குறைந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார். மேலும்  ராகுல் காந்தியிடம் இருந்து ஏதேனும் வாக்குறுதி உங்களுக்கு கிடைத்ததா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ உண்மையில் கிடையாது, என்னுடைய கனவில் பார்த்தபோது என்னை திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார்,” என்றார். அவருடையை கற்பனை உலகத்தில், ராகுல் காந்தி திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து உள்ளார், மனைவியாகி உள்ளார், குழந்தையும் உள்ளது. பேட்டியில் அவர் தன்னுடைய எண்ணங்களை தெரிவித்து உள்ளார்.