வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (16:37 IST)

பணத்திற்காக முதியவர்களை புலிக்கு இரையாக்கும் கிராம மக்கள்

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அரசின் இழப்பீடு தொகை பெறுவதற்காக தங்கள் குடும்பத்தை சேர்ந்த முதியவர்களை புலிக்கு இரையாக்குவதாக வனவிலங்கு குற்றத்தடுப்பு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபித் புலிகள் சரணாலயம் பகுதியை ஓட்டியுள்ள கிராம மக்கள் புலிகள் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்கி வருகிறது.
 
புலிகள் தாக்கு அடிக்கடி முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் குறித்து வனவிலங்கு குற்றத்தடுப்பு அமைப்பு அதிகாரி கலீல் அத்தர் பிலிபித் ஆய்வு ஒன்றை நடத்தினார். ஆய்வில் தெரிவிக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கிராம மக்கள் அரசு இழப்பீடு தொகை பெற தங்கள் குடும்பத்தை சேர்ந்த முதியவர்களை புலிக்கு இறையாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு முதியவர்களை அனுப்பி வைக்கிறார்கள். புலியால் தாக்கப்பட்டு இறந்தவர்களைன் உடலை எடுத்து வந்து கிராமப் பகுதியில் போட்டு விடுகிறார்கள். பின்னர் இரை தேடி ஊருக்குள் வந்த புலி கொன்று விட்டதாக கூறி இழப்பீடு பெறுகிறார்கள்.