செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:58 IST)

உபி முதல்வரை எதிர்த்து பாஜக பிரமுகரின் மனைவி போட்டி: அகிலேஷ் யாதவ் அதிரடி!

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகி வருகிறது
 
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக சுபாவதி என்பவர் போட்டியிடுகிறார்
 
பிராமண வகுப்பைச் சேர்ந்த இவர் முன்னாள் பாஜக பிரமுகர் சுக்லாவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் அவருக்கு முதல்வர் யோகியை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் உத்தரப்பிரதேச முதல்வர் தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.