அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 30 குழந்தைகள் பரிதாப பலி

UP children" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (23:55 IST)
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் யோகி பதவியேற்றவுடன் அந்த மாநிலம் சிங்கப்பூராக மாறிவிடும் என்று பாஜகவினர் கூறினர். அதற்கு ஏற்றாற்போல் அவரும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் இன்று அதே மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 30 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த மாஜிஸ்திரேட் கூறியபோது, 'ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை. இந்த பண பாக்கி காரணமாக ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் 30 குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார். 
 
ஆக்சிஜனுக்கு பணம் கொடுக்காததற்காக மருத்துவமனை நிர்வாகத்தை குறை சொல்வதா? ஆக்சிஜனை திடீரென நிறுத்தினால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய நிறுவனத்தை குறை சொல்வதா? என்று தெரியவில்லை. ஆனால் 30 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக உபி அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :