வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (10:11 IST)

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்த பவன்குமார் பன்சால், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜரானார்.
 
பவன்குமார் பன்சால் தனது பதவி காலத்தில், அவரது உறவினர் விஜய் சிங்லா ரயில்வே மின்சாரத்துறை உறுப்பினர் பதவியை மகேஷ்குமார் என்பவருக்கு வாங்கித் தருவதற்கு ரூ.10 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
 
இது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 16 ஆம் தேதி ஆஜராகி சாட்சியளிக்கும்படி சி.பி.ஐ. நீதிமன்றம் பவன்குமாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
 
ஆனால் அன்று அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை. இந்நிலையில் பவன்குமார் நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் சிங்லா என்னை சந்தித்தபோது நான் ஒரு போதும் மகேஷ்குமாரின் நியமனம் குறித்து பேசியதில்லை.
 
ரயில்வே வாரியத்தின் ஊழியர்கள் பிரிவின் மூத்த உறுப்பினராக மகேஷ்குமார் இருந்தார். அதன் அடிப்படையில் அவர் பதவி உயர்வு பெற்றார்“ என்று கூறினார்.