பேருந்து நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: பதற்றத்தில் ஜம்மு காஷ்மீர்

Last Updated: வியாழன், 7 மார்ச் 2019 (12:34 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
புல்வாமா தாக்குதல், அதன் பின்னர் எல்லையில் அத்துமீறி நடத்தப்பட்ட தாக்குதல் என அனைத்திலும் இருந்த பதற்றமான சூழ்நிலை மறைந்தது. அதற்குள் ஜம்முவில் தற்போது நடந்த குண்டு வெடிப்பு அங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 
 
இந்த குண்டு வெடிப்பின் காரணமாக பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிர் சேதம் ஏதுமில்லை என கூறப்படுகிறது. 
 
இருப்பினும் குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் போலீஸார் குவிகப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துக்குள் குண்டு வெடித்ததாக் கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு யாரால் நடத்தப்பட்டது? என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது? என எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :