திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:58 IST)

தவறாக அவுட் கொடுத்த அம்பயரை கத்தியால் குத்தி கொலை செய்த பேட்ஸ்மேன்: ஒடிசாவில் பரபரப்பு..!

தவறாக அவர் கொடுத்த அம்பயரை கத்தியால் குத்தி பேட்ஸ்மேன் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே நேற்று கிரிக்கெட் போட்டியில் நடத்தப்பட்டது . இதில் பெர்காம்பூர் மற்றும் சங்கர்பூர் ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்ற நிலையில் போட்டி நடுவராக ராவத் என்பவர் செயல்பட்டு வந்தார்.
 
இந்த நிலையில் பெர்காம்பூர் அணி முதலில் பேட்டிங் செய்த போது அம்பயர் ராவத் அவுட் வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பேட்ஸ்மேன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து திடீரென அவர் பேட்டால் தாக்கினார் அதுமட்டுமின்றி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அம்பயரை குத்தியதாகவும் இதனால் படுகாயம் அடைந்த அம்பயர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து அம்பயரை கொலை செய்த பேட்ஸ்மேனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva