Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அழகற்ற பெண்கள்தான் வரதட்சணைக்கு காரணம்: பள்ளி பாடநூலில் விளக்கம்

Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:11 IST)

Widgets Magazine

அழகற்ற, ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் நடைப்பெறுவது கடிணம், அவர்களால் தான் இன்றும் வரதட்சணை முறை செயல்பாட்டில் உள்ளது என்று மாநில சமூகவியல் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.


 


மராட்டிய மாநிலம்  12ம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் முக்கிய சமூகப் பிரச்னைகள் என்ற தலைப்பில் வரதட்சணை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வரதட்சணைக்கு காரணம் அழகற்ற பெண்களும், ஊனமுற்ற பெண்களும் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில்,

பெண்கள் அழகு இல்லாமலும், மாற்றுத்திறனாளியாகவும் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடைப்பெறுவதும் கஷ்டம். இந்த பெண்களை திருமணம் செய்துக்கொள்ள மணமகன் வீட்டில் அதிக அளவில் வரதட்சணை கேட்கப்படுகிறது. இந்த பெண்களின் பெற்றோர்கள் வேறு எதுவும் செய்ய முடியாமல் வரதட்சணை கொடுத்து வருகின்றனர். இந்த காரணங்கள் தான் வரதட்சணை முறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அந்த பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை பலரும் படித்துவிட்டு கடந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தவுடே கூறியதாவது:-

மராட்டிய  மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கலந்து ஆலோசித்தேன். இந்த பாடத்திட்டத்தை கடந்த மூன்று வருடங்களாக மாணவர்கள் படித்துவருகிறார்கள். இது அரசியலாக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல என்று நான் நினைக்கிறேன்.

மாநிலக் கல்வித்துறை தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்த பின்னர், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி - நாட்டு இன மாடுகளுக்கு திடீர் மவுசு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும், காங்கேயம் இனம் உள்ளிட்ட நாட்டு ...

news

ஜெ.வின் கால்கள் வெட்டப்பட்டதா?- பிரதாப் ரெட்டி பரபரப்பு பேட்டி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை ...

news

ஜெ. மர்ம மரணம் குறித்து எந்த நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் கௌதமி?: வெளிச்சம் போட்டு காட்டிய இளைஞர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ ...

news

தீவுக்கடியில் புதிய கண்டம் ஆய்வாளர்கள் உறுதி!!

மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ...

Widgets Magazine Widgets Magazine