வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (11:45 IST)

மறுபடியும் ஊரடங்கு போட வெச்சிடாதீங்க! – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் 15 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுவரை மகாராஷ்டிராவில் 22,97,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52,811 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் புனே, நாக்பூர், தானே உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட் மற்றும் மால்கள் நடத்தி வரும் பிரதிநிதிகளை அழைத்து பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, “நான் மீண்டும் மால்கள், ஹோட்டல்களை மூட விரும்பவிலை. அதனால் விதிமுறைகளை கடுமையாக கடைபிடியுங்கள். இதுவே கடைசி முறை. என்னை மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவுக்கு நிர்பந்திக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.