1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 செப்டம்பர் 2018 (21:46 IST)

டூவீலர் கேப் சர்வீஸ் நடத்தும் பெண்: சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துக்கள்

கார் மற்றும் ஆட்டோ கேப் சர்வீஸ் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் டெல்லியில் ஒரு பெண் டூவிலர் கேப் சர்வீஸ் நடத்தி வருகிறார். அதுவும் அவர் பெண்களுக்கு மட்டுமே இந்த சேவையை செய்து வருகிறார்

பகல் மற்றும் இரவு எந்த நேரமாக இருந்தாலும் ஆட்டோ மற்றும் கார் கேப் சர்வீஸில் செல்வது பெண்களுக்கு முழு பாதுகாப்பை தருவதில்லை. இதனை கணக்கில் கொண்டு லலிதா யாதவ் என்ற பெண் டெல்லியில் டூவிலர் கேப் சர்வீஸ் ஒன்றை நடத்துகிறார். இதன்மூலம் டெல்லி சிட்டியில் எந்த இடத்தில் இருந்து ஒரு போன் அழைப்பு கொடுத்தால் போதும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பிக்கப் செய்து பின்னர் டிராப் செய்து வருகிறார். இதற்காக அவர் வாங்கும் கட்டணம் மிக மிக குறைவு

இந்த கேப் சேவையை லலிதா தன்னுடைய தோழிகளை வைத்து நடத்தி வருகிறார். பாதுகாப்பு, பணம் மிச்சம், நேரம் மிச்சம் என்பதால் இவருடைய டூவிலர் கேப் சர்வீஸ் குறுகிய காலத்தில் ஃபேமஸ் ஆகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சேவையை ஒரு சமூக சேவையாக செய்து வரும் லலிதாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.