வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (09:20 IST)

கொரோனாவை தடுக்க 2 மாதமாவது முழுமுடக்கம் அவசியம்! – ஐசிஎம்ஆர் கருத்து!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் குறைந்தது 2 மாத பொது முடக்கமாவது அவசியம் என ஐசிஎம்ஆர் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 700க்கும் அதிமான மாவட்டங்களில் 500க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10% க்கும் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதனால் குறைந்தது 6 முதல் 8 வார காலமாவது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என கூறியுள்ள அவர், கொரோனா பாதிப்பு 10%க்கும் அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.