1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (15:59 IST)

லடாக்கை சீனாவின் பகுதி போல காட்டிய டிவிட்டர் – மத்திய அரசு கண்டனம்!

டிவிட்டரில் லடாக்கை சீனாவின் ஒரு பகுதி போல காட்டிய வரைபடத்தைக் காட்டியதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

லடாக்கின் லே பகுதியை சீனாவின் ஒரு பகுதி போல் காட்டும் வகையில் டிவிட்டர் இந்தியா வரைபடம் ஒன்றை காட்டியுள்ளது. இந்திய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஜய் ஷானே கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைமையிடம் லே ஆகும். அங்கு இந்திய அரசியல் சாசனத்தின் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. டிவிட்டர் தவறான வரைபடம் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அவமதிப்பு செய்யும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.’ எனக் கூறியுள்ளார்.