1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (06:24 IST)

எந்த வங்கி 2.5% வட்டி தருகிறதோ அந்த வங்கியில் 7,000 கிலோ தங்கம் டெபாசிட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

உலகில் உள்ள வருமானம் அதிகமாக உள்ள தலங்களில் இரண்டாவது என்று பெயர் பெற்றுள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் கோடிக்கணக்கான ரூபாயும், கிலோ கணக்கில் தங்கமும் வெள்ளியும் காணிக்கையாக குவிந்துள்ளது.



 


இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கிடைத்துள்ள 7 கிலோ தங்கத்தை எந்ததேசிய மயமாக்கப்பட்ட வங்கி 2.5 சதவீதம் வட்டி தருகின்றதோ அந்த வங்கியில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக திருப்பதி திருமலையின் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சதலவாட கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் முறைகேடு நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் இ-தர்ஷன் கவுண்டர் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 24 மணி நேரமும் வந்துசெல்லும் விதமாக மலைப்பாதை திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.