இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அலிபிரி அருகில் உள்ள பூதேவி தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன் களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் பக்தர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டாலும் விரைவில் தமிழகம் உள்பட பிற மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசனம் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது