1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:28 IST)

சபாநாயகர் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ

சபாநாயகர் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ
திரிபுரா சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன், சபாநாயகர் முன்பு வைக்கப்பட்டிருந்த செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடியதால் சட்டசபை உள்ளே பரபரப்பு ஏற்பட்டது.


 

 
திரிபுரா மாநிலம் சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தின் போது திடீரென எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர். அப்போது எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன், சபாநாயகர் முன்பு வைக்கப்பட்டிருந்த செங்கோலை தூக்கிக் கொண்டு சட்டசபைக்கு வெளியே ஓடியுள்ளார்.
 
பின்னர் சட்டசபையின் மார்ஷல் அவரை பிந்தொடர்ந்து, செங்கோலை மீட்டு வந்து அதே இடத்தில் வைத்தார். இதுகுறித்து சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் கூறியதாவது:-
 
அவர் விவாத்தின் நடுவே திடீரென்று செங்கோலை எடுத்துக் கொண்டு ஓடினார். இதை அவர் செய்திருக்க கூடாது. எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. செங்கொலை எடுத்துக்கொண்டு ஓடுவது இது மூன்றாவது முறை, என்றார்.