மும்பையில் தொடரும் கனமழை: போக்குவரத்து பாதிப்பு!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 20 செப்டம்பர் 2017 (21:46 IST)
மும்பையில் தொடரும் கனமழையால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

 
 
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. கனமழை விளைவால் பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
 
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தொடர் மழையால் ரயில் மற்றும் விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
சத்ரபதி சிவாஜி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
 
மேலும், மும்பை வரும் 56 விமானங்கள் கோவா, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.
 
இதே போல் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில்கள் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :