Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!


Caston| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:51 IST)
திருநங்கைகள் சேலை அணியக் கூடாது எனவும் அவர்கள் ஆண்களை போல பேண்ட் சட்டை அணிய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் இந்திய குடியரசு கட்சியின் தலைவராக இருக்கும் ராம்தாஸ் அத்வாலே ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் உள்ளார்.
 
இவர் நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநங்கைகள் ஆண்களோ, பெண்களோ இல்லை. அவர்கள் மனிதர்கள். அவர்கள் பெண்ணாக இல்லாத போது ஏன் சேலை அணிய வேண்டும். அதற்கு பதிலாக பேண்ட் சட்டை அணிய வேண்டும் என கூறினார்.
 
திருநங்கைகள் ஆண்களுக்கான உடையை தான் அணிய வேண்டும். அவர்கள் சேலை அணியக்கூடாது என்பது எனது கருத்து என அத்வாலே திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
 
இவர் கூறிய இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடை அணிவது அவரவர் விருப்பம் என திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :