தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்கும் திருநங்கை

trans
Last Modified புதன், 16 மே 2018 (15:34 IST)
கேரள மாநிலத்தில் செவிலியரான திருநங்கை தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸிஜி(51). திருநங்கையான இவர் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில் விசாவை புதுப்பிக்காததால் சவுதி அரசு ஸிஜியை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதனையடுத்து ஸிஜி கேரளாவில் வேலை தேடி வந்தார். ஆனால் ஸிஜிக்கு எந்த மருத்துவமனையும் வாய்ப்பளிக்கவில்லை.
 
இதனால் அவரது குடும்பத்தினர் ஸிஜின்யை வெறுத்தனர். இதனால் மனமுடைந்த ஸிஜி திருச்சூர் கலெக்டரை சந்தித்து, தான் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
இதனையடுத்து அவரை சமாதானப்படுத்திய ஆட்சியர், அவருக்கு உதவுவதாக உறிதியளித்ததையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :