Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் ஒரு விபச்சாரி: ஒபாமாவை அதிர வைத்த திருநங்கையின் கேள்வி

Last Modified சனி, 2 டிசம்பர் 2017 (15:39 IST)
இந்தியாவுக்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதில் பல சமூக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வந்தார். அப்போது சமூக ஆர்வலரும் திருநங்கையுமான அக்கை பத்மஷலிஸ் என்பவர் கேட்ட கேள்வியால் ஒபாமா சில வினாடிகள் அதிர்ந்துவிட்டார்.

ஒபாமாவிடம் அக்கை கேட்ட கேள்வி இதுதான்: நான் ஒரு திருநங்கை, விபச்சாரம் செய்துள்ளேன், பிச்சை எடுத்துள்ளேன். இந்திய சட்டப்படி நான் ஒரு குற்றவாளி. ஆனால் இந்த சமுதாயத்தால் நான் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளேன். செய்யாத தவறுகளுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளேன். இதற்கு என்ன தீர்வு? என்று கேட்டார்.

சில நொடிகள் அதிர்ச்சி அடைந்த ஒபாமா பின்னர் சுதாரித்து கொண்டு, இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால் அதே நேரத்தில் உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கின்றது. நீங்கள் சந்தித்த நெருக்கடிகள், சவால்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை பிறர் அறிய செய்ய முயற்சியுங்கள். இதே சவால்களை, கஷ்டங்களை சந்திப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அப்போது உங்கள் வட்டம் பெரிதாகும். நீங்கள் சிறுபான்மையராக இருந்தாலும் உங்களது குரல்கள் பெரிதாகும்' என்று ஒபாமா கூறினார்.
ஒபாமாவின் இந்த பதிலுக்கு அக்கை நன்றி தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :