1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (18:03 IST)

இணைய சமத்துவத்தை வலியுறுத்தி ட்ராய் இணையதளம் முடக்கம்

10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் இ-மெய்ல் முகவரியை ட்ராய் வெளியிட்டதால், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனிக் கட்டணம் வசூலிக்கும் விதமாக சில திட்டங்களை அறிவித்திருந்தன.
 

 
இணைய சமத்துவத்திற்கு 'Net Neutrality' எதிரான இந்த திட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இது குறித்த கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று தொலைத்தொடர்பு அமைப்பான ‘ட்ராய்’ (TRAI) அறிவித்தது.
 
இதையடுத்து இணைய சமத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கானோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் ட்ராய் நிறுவனம், இணைய சமத்துவத்தை வலியுறுத்தி பதிவு செய்த சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் நேற்று பகிரங்கமாக வெளியிட்டது.
 
இதற்கும் தற்போது நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வலுத்திருக்குறது. மேலும், ட்ராய் அமைப்பைக் கண்டித்தும், திட்டியும் சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.
 
இவற்றையும் தாண்டி சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்ராய் அமைப்பின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை கடந்த சில மணித்துளிகள் முடக்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.