வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (17:54 IST)

பறக்கும் விமானத்தில் சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

பறக்கும் விமானத்தில் ஒரு சிறுமிக்கு மாரடைப்பு வந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ விமான நிலையத்திலிருந்து, மும்பைக்குச் சென்ற விமானத்தில் 7 வயது சிறுமி ஒருவர்  தன் பெற்றோருடன் பயணித்ததார்.

அச்சிறுமி ஏற்கனவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் பெற்றோரும் அவர்களுக்கு அருகில் இருந்தோரும் செய்வதறியாமல் பதறினர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் மும்பை செல்லும்வழியிலேயே சிறுமி மரணம் அடைந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.