1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (09:53 IST)

மீண்டும் 750 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

Share Market
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஆயிரத்து 300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று மீண்டும் 750க்கும் அதிகமான புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதிலிருந்தே சரிவில் இருக்கும் சென்செக்ஸ் சற்றுமுன் 764 புள்ளிகள் சரிந்து 54 ஆயிரத்து 920 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 250 புள்ளிகள் வரை சரிந்து 16,434 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 3 நாட்களில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது