சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை: 70,000 பக்தர்களுக்கு அனுமதி..!
இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளதை அடுத்து 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் மண்டல பூஜை முன்னிட்டு இன்று சபரிமலைக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மகர விளக்கு, மகரஜோதி பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலம் நாளை நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து இன்று மண்டல பூஜை நடந்ததை அடுத்து 450 பவுன் எடையில் உள்ள தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.
இன்று காலை 10:30 மணி முதல் 11.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும் என்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்ட உடன் நாளை காலை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசை காணப்படுகிறது.
Edited by Siva