பரபரப்பான சூழ்நிலையில் தம்பிதுரையின் திடீர் டெல்லி பயணம் ஏன்?


sivalingam| Last Modified செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (00:39 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இணைப்பு குறித்து எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வ செய்திகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

 


இந்த நிலையில் சற்று முன்னர் அதிமுகவின் முக்கிய பிரமுகரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை திடீரென நள்ளிரவில் டெல்லி கிளம்பி சென்றார்.

தம்பித்துரை எதற்காக டெல்லி செல்கிறார், அங்கு யாருடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறித்த தகவல் இதுவரை கட்சியின் வட்டாரத்தில் இருந்து வெளிவரவில்லை. இருப்பினும் நாளை அவர் தேர்தல் கமிஷனில் இரு அணிகளும் இணைவது குறித்து தகவல் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை கூறியதாவது: அதிமுகவில் பிளவு இல்லை. மாற்றுக் கருத்துகள் மட்டுமே உள்ளன. கூடிய விரைவில் அந்த கருத்து மாறுபாடு மறையும்.’ என்று கூறினார்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :