புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.vadivel
Last Modified: சனி, 21 மே 2016 (14:01 IST)

ராஜ்யசபா தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஜ்யசபாவில் காலியாக உள்ள இரண்டு எம்பி பதவிகளுக்கு திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
 

 
இந்தியாவில், 15 மாநிலங்களில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 57 எம்பிக்களின் பதவி காலாம் முடிவடைகிறது. இதில், தமிழகத்தில் அதிமுக சார்பில், நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் சுதர்சன நாச்சியப்பன், திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு ஆகியோர்  பதவி காலம் முடிவடைய உள்ளது.
 
இந்த நிலையில், ராஜ்யசபாவில் இரண்டு எம்பி பதவிக்கு திமுக சார்பில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் போட்டியிடுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்