திருப்பதியில் ஏப்ரல் முதல் இலவச திவ்ய தரிசன டோக்கன்! எப்படி வாங்கலாம்? – தேவஸ்தானம் அறிவிப்பு!
கோடை விடுமுறை நெருங்கி வருவதால் திருப்பதி கோவிலுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இலவச தரிசன டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வரும் நிலையில், பக்தர்கள் வழிபட வசதியாக சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மலை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரை வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினசரி 10 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மேட்டு வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினசரி 5 ஆயிரம் டோக்கன்களும் என மொத்தமாக 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் அனைத்து பக்தர்களும் வழிபட திட்டமிட்டு ரூ.300 மற்றும் ரூ.500 சிறப்பு தரிசன எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோடைக்காலத்தில் பயணிக்கும் பக்தர்களுக்கு தண்ணீர், உணவு, தங்குமிடம் போன்றவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K