ஆஞ்சநேயர் இங்கதான் பிறந்தார்னு ஆதாரம் இருக்கு! – திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!
இந்து கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயர் திருப்பதியில் உள்ள மலையில் பிறந்ததற்கு ஆதாரம் உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆஞ்சநேயர், அனுமான் என பல பெயர்களில் அழைக்கப்படும் குரங்கு உருவம் கொண்ட இந்து கடவுள் ஆஞ்சநேயர். தீவிர ராம பக்தராக இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இவருக்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்கள் உள்ளன. எனினும் ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து பல்வேறு கருத்துகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.
இந்நிலையில் ஆஞ்சநேயர் திருப்பதியில் உள்ள அஞ்னாத்திரி மலையில் பிறந்ததாக திருமலை தேவஸ்தானம் கூறியுள்ளது. இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஏப்ரல் 13 தெலுங்கு புத்தாண்டு அன்று ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்த சான்றுகளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.