திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (14:19 IST)

டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம் .. டிக் குக் திறந்து வைத்தார்..!

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஷோரூம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பையில் தொடங்கப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் திறந்து வைத்துள்ளார். 
 
உலகெங்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஷோரூம் இருந்தபோதிலும் இந்தியாவில் பிரத்யேக ஷோ ரூம் எதுவுமில்லை என்பது ஒரு குறையாக இருந்தது, இந்த நிலையில் இந்தியாவில் முதல் ஆப்பிள் ஷோரூம் சமீபத்தில் மும்பையில் திறக்கப்பட்டது என்பதும் இதில்  பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது இந்த ஷோரூமை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ திறந்து வைத்தார். மேலும் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் விரைவில் ஆப்பிள் ஷோரூம் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva