வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (10:56 IST)

சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் – போலிஸ் குழப்பம் !

டெல்லியைச் சேர்ந்த மோஹித் குமார் என்பவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த மோஹித் மோர் என்பவர் டெல்லியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் டிக்டாக்கில் பல வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அதனால் இவருக்கு டிக்டாக்கில் பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகம்.

இவர் அவர் பணிபுரியும் உடற்பயிற்சி நிலையத்துக்கு அருகே இருக்கும் ஜெராக்ஸ் கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது மூன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலைக்கான காரணம் இதுவரையில் விலகாத மர்மமாக இருந்து வருகிறது.சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து கொலையாளிகளைப் பற்றி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோஹித்தின் சமூகவலைதளப்பக்கங்களிலும் அவரது மரணம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.