வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (08:30 IST)

டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் – ரயில்வே வாரியம் அறிவிப்பு!

இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு மே இறுதியுடன் முடியும் நிலையில் ஜூன் முதல் தொடங்க உள்ள ரயில் சேவைகளுக்கு முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன.

ஜூன் முதல் 200 ரயில்கள் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில் அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்க உள்ள ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை கவுண்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்பதை முதன்மை வர்த்தக மேலாளர் முடிவு செய்ய வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.