1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 டிசம்பர் 2018 (14:07 IST)

தலைவருக்காக நாக்கை வெட்டிய தொண்டன் ....மக்கள் ஓட்டம்

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் சூரம் பிடித்துள்ளதால் முக்கியமான கட்சிகள் அசுர வேகத்தில் பணியாற்றி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவரான மகேஷ் (35)என்பவர் தீவிரமாக அரசியலில் ஈடுபாடு கொண்டவர்.
 
இந்நிலையில் நாளையும் , 11 ஆம் தேதியும் நடக்க உள்ள தேர்தலில் தன் கட்சி தலைவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பிரசித்தி பெற்ற ஒரு கோயிலுக்கு சென்ற மகேஷ் கடவுளை வழிபட்டுள்ளார்.
 
அதன் பின் தன் கட்சி தலைவர் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுதலுக்காக  சட்டை பாக்கெட்டில் இருந்த பிளேடை எடுத்து தன் நாக்கை வெட்டி அருகில் இருந்த காணிக்கை பெட்டியில் போட்டுள்ளார்.
 
அதன் பிறகு மகேஷ்  ரத்தம் வெள்ளத்தில் மயங்கி விழ ... அருகில் நின்றிருந்த மக்கள் பயந்து ஓடிப்போய்விட்டார்கள். அங்குள்ளவர்களின் உதவியால் மகேஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இதனையடுத்து மகேஷின் பாக்கெட்டில் இருந்த கடிதத்தில் தன் வேண்டுதலை அவர் கைப்பட எழுதி வைத்துள்ளதை  ஆதாரமாகக் கொண்டு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
தேர்தலில் தலைவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நாக்கை  வெட்டிக் கொண்ட நபரால் ஆந்திர மாநிலம் கோதாவரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.