1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (07:33 IST)

அரைமணி நேரத்தில் 3 முறை நில அதிர்வு.. அதிகாலையில் அதிர்ந்த ஜெய்ப்பூர்..!

earthquake
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 
 
 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை  அரை மணி நேர இடைவெளியில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அதிகாலை 4.09 மணிக்கு, 4.25 மணிக்கு, 4.31மணிக்கு அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த மூன்று நில அதிர்வுகளும் நான்கு ரிக்டர் அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  
 
இந்த நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கினாலும் எந்த விதமான சேதமும் இல்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva