திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (14:39 IST)

நிஜமானது வடிவேலு காமெடி: ஒரே பெண்ணுக்கு அடித்து கொண்ட 3 நபர்கள்

அர்ஜூன் நடித்த 'மருதமலை' படத்தில் வடிவேலு காமெடி ஒன்று உண்டு. அதில் ஒரே பெண்ணை நான்கு பேர் அவருடைய கணவர் என்று கூறிக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்த போட்டி போடுவார்கள். அந்த சினிமா காட்சி தற்போது பெங்களூரில் உண்மையாகியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சசிகலா என்ற பெண் தனது கணவர் மாதவன் என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மூர்த்தி, சித்தராஜூ என்ற 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அருண்குமார் என்பவருடனும் சசிகலா பழகி வந்தார்.

நேற்று அருண்குமாருடன் சசிகலா டுவீலரில் சென்ற போது மூர்த்தி, சித்தராஜூ ஆகியோர் இருவரையும் பார்த்துவிட்டனர். உடனே ஆத்திரமடைந்த அவர்கள் சசிகலா சென்ற டுவீலரை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பெண்​ணை யார் அழைத்து செல்வது என மூவருக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டது. நீண்ட சண்டைக்கு பின்னர் இனிமேல் தான் அருண்குமாருடன் தான் வாழப்போவதாக கூறி அருண்குமாருடன் சசிகலா கிளம்பிச் சென்றார். இதனையடுத்து மூர்த்தி, சித்தராஜூ ஆகியோர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒரு பெண்ணுக்காக மூன்று பேர் சாலையில் அடித்து கொண்ட சம்பவத்தை அந்த பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.