Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 வயதில் தேவதாசியான சிறுமி: பெற்றோர், சாமியார் கைது!

5 வயதில் தேவதாசியான சிறுமி: பெற்றோர், சாமியார் கைது!


Caston| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (18:22 IST)
கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை தேவதாசி முறையில் தள்ளி, பாலியல் தொழில் செய்ய வைத்த பெற்றோர்கள் மற்றும் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
இந்தியாவில் தேவதாசி முறையானது வழக்கமான ஒன்றாக பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. அதன் பின்னர் பல சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
 
ஆனால் ரகசியமாக இந்த தேவதாசி முறை சில மாநிலங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் மாவின்சுர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 5 வயது சிறுமிக்கு தேவதாசி பட்டம் அளிக்கப்பட்டு மதச்சடங்குகளை நடத்தியுள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோரும் கோவில் சாமியாரும்.
 
தற்போது அந்த சிறுமிக்கு 10 வயதாகியுள்ளது. இந்நிலையில் சிறுமி தேவதாசியாக வாழ்ந்து வருவது குழந்தைகள் நல குழுவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை தேவதாசி முறையில் இருந்து மீட்ட குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை தேவதாசியாக்கி பாலியல் தொழிலில் தள்ளிய பெற்றோர், சடங்கு நடத்திய சாமியாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :