வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (17:46 IST)

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்காக மக்கள் எங்களை பாராட்டுவார்கள் என நினைத்தோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசியில் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது தவறு தான் என்றும், தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்காக மக்கள் தங்களை பாராட்டுவார்கள் என கருதியதாகவும் தெரிவித்துள்ளார். 
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார். இதற்காக மக்களிடம் வாக்கு சேகரிக்க, அவர் தனது குடும்பத்தினரோடு  வாரணாசிக்கு வந்துள்ளார்.
 
இந்த நிலையில் அவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு  அளித்த சிறப்பு பேட்டியில், 
 
டெல்லி முதலமைச்சர்  பதவியில் இருந்து ராஜினாமா செய்தது  தவறு தான்.கொள்கை ரீதியாக பார்க்கும்போது நான் விலகியது சரியானதுதான். ஆனால், டெல்லியில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு, ஆம் ஆத்மி சார்பில் பொது மக்களிடம் தொடர்பு கொண்டு கருத்துக்கள் கேட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. 
 

அதே போன்று ஆட்சி பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன், மக்களிடம் தொடர்பு கொண்டு, அவர்களது கருத்துக்களைக் கேட்டு பிறகு முடிவு எடுத்திருக்க வேண்டும். 
ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ்  மற்றும்  பாஜக ஒன்று சேர்ந்து கொண்டு எங்களை பணியாற்ற விடவில்லை. 
 
முதலமைச்சர்  பதவியில் இருந்து விலகியதை நாங்கள் பெரிய தியாகம் செய்ததாக நினைத்தோம். இதற்காக மக்கள் எங்களை பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அனால் மக்களுக்கு அந்த லாஜிக் புரியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.