போலீஸுக்கே இந்த நிலைமையா...? அந்த கறுப்பு ஆடு யாருன்னு கண்டு புடிங்க...

utter pradesh
Last Updated: திங்கள், 1 அக்டோபர் 2018 (16:37 IST)
வட இந்தியாவிலுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரியின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ஒரு பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசமாநிலத்தில் உல்ள பாரபங்கி காவல் நிலையத்தில் அர்ச்சனா என்ற பெண் காவலர் பணிபுரிந்து வந்தார். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
 
இதனால் மனம் விரக்தியடைந்த அர்ச்சனா ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் அதே சமயம் பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
 
இந்நிலையில் பெண்போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :