1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:17 IST)

2020- ல் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு இதுதான்!

ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிகரித்தத் தொடங்கியதும் மக்களின் வீட்டிற்கு அனைத்து வசதிகளும் வரத்தொடங்கிவிட்டது. இதில், முக்கியமாக உணவுப் பொருட்களும் அடக்கம்.

இந்நிலையில்,இந்தியாவில் உள்ள ஆன்லைன் உணவுப்பொருள் விநியோகஸ்தத்தில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ள ஸ்விகியில் 2020 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் எவை எவை எனத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நொடியும் வாடிக்கையாளர்கள் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளதாகவும்,  இதற்கடுத்து, மசாலா தோசையும், பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸ் அதிகளவில் ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.