1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (17:52 IST)

திருப்பதி லட்டு விலை உயர்வு... சலுகை விலையும் ரத்து...பக்தர்கள் ஏமாற்றம் !

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு சலுகை விலையில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் திருப்பதி ஏழுமலையான் பணாக்கார கடவுளாக இருக்கிறார். பக்தர்களு வேண்டுதல்கள் நிறைவேறுவதால் மக்கள் காணிக்கைகள் அளிப்பதற்காகவும், ஏழுமலையானை  தரிசனம் செய்வதற்காகவும் தினமும் லட்சக்கணக்கான் பக்தர்கள் திருப்பதிக்குக்கு செல்கின்றனர். 
 
இதில், 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்பவர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகிறது.   இரு மலைப்பாதைகளில் இருந்து நடந்துவரும் தரிசன பக்தர்களுக்கு இலவசமகா 1 லட்டும், சலுகை விலையில் 20 ரூபாய்க்கு 2 லட்டுகளும் , 50 ரூபாய்க்கு 2 லட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், ஒரு லட்டு தயாரிக்க ரூ. 40 செலவாகும் என்பதாலும், சில பக்தர்களுக்கு இலவச லட்டுகள் வழங்கப்படுவதாலும்  திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருடம் தோறும் 241 .20 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில்,  ஒருலட்டு செய்ய ரூ. 50க்கு விற்பனை செய்ய உள்ளதாகவு திருப்பதி தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.