ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (14:50 IST)

டைம் பேபிள் போட்டு திருடி மொக்கை காரணத்திற்கு மாட்டிய திருடர்கள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே திருடும் வித்தியாசமான இரு திருடர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களில் பூட்டி இருக்கும் வீட்டில் குறிப்பாக செவ்வாய்கிழமை மட்டும் திருட்டு சம்பவ அதிகளவில் நடந்து வந்துள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். 
 
தீவிர தேடுதலில் சிக்காத இவர்கள், எதர்ச்சியாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியது பின்வருமாறு, இந்த இரு திருடர்களும் செவ்வாய்க்கிழமை மட்டும் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற நாட்களில் திருடினால் போலீஸிடம் சிக்கிக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருந்ததால், மற்ற நாட்களில் இவர்கள் கொள்ளையடிப்பதில்லை.
 
இந்த இரு திருடர்களுக்கும் (முகமது சமீர்கான், முகமது சோகைப்)  ஜெயிலில்தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சமீர்கானுக்கு இரவில் பார்வை சிறிது மந்தம் என்பதால், பகலில் மட்டும் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
 
இருவர் மீதும் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடம் இருந்து 700 கிராம் தங்கம், ரூ.21 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.