வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (16:27 IST)

மும்பையில் இனி ‘காலி பீலி’ டாக்சி கிடையாது! - 60 வருடம் பழமை வாய்ந்த டாக்ஸிக்களுக்கு முடிவுரை!

Khali Pheeli
மும்பையில் பிரபலமாக இருந்த கருப்பு, மஞ்சள் நிறத்திலான காலி பீலி டாக்சி சேவைகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மும்பை என்றாலே பலருக்கும் நினைவு வரும் பழமையான விஷயங்களில் ஒன்று டாக்ஸி. காலி பீலி என அழைக்கப்படும் மஞ்சள், கருப்பு நிற டாக்ஸிக்கள் இல்லாத மும்பையை நினைப்பதே கடினம். அப்படியான டாக்ஸிகளுக்குதான் தற்போது முடிவுரை எழுதப்பட்டுள்ளது.

1970களில் ப்ரீமியர் ஆட்டோமொபைல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரீமியர் பத்மினி என எல்லாராலும் அழைக்கப்பட்ட கார் மாடல்தான் காலி பீலி டாக்ஸிகள். தமிழில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வருவது கூட இந்த ப்ரீமியம் பத்மினி கார்தான். இந்த காருக்கு கருப்பு, மஞ்சள் வண்ணமடித்து கால் டாக்சியாக பல காலமாக மும்பை டாக்சிவாலாக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

2001ல் இந்த கார்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் மும்பை நகரத்தில் ஒரு தயாரிப்பு காரை இயக்குவதற்கான காலம் 20 ஆண்டுகள்தான் என்பதால் இந்த கார்களை இயக்குவது அக்டோபர் 30 உடன் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த 60 ஆண்டு காலத்தில் எவ்வளவோ நினைவுகளை அளித்த இந்த காலி பீலி ப்ரீமியர் பத்மினி இனி நம் நினைவுகளோடே இருக்கும்.

Edit by Prasanth.K