1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (11:48 IST)

விஜய் மல்லையா மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

தலைமறைவு குற்றவாளி என தன்னை அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த சமீபத்தில் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டுவர இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த ஒரு வழக்கில் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். இந்த வழக்கில் தன்னை தலைமறைவு குற்றவாளி என அறிவித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை விஜய் மல்லையா தாக்கல் செய்தார்
 
இந்த மனு கடந்த சில மாதங்களாக விசாரணைக்கு வந்த நிலையில் சற்று முன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இதனால் தலைமுறைகள் நீதிமன்ற இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது