1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (20:29 IST)

வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் என தகவல் வெளியாகிறது.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,  தொடர்ந்து 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது பாஜக, நாட்டில் மிக பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
 
இதற்காக கட்சி கமிட்டிகளை அமைத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.  பொதுத்தேர்தலுக்கு முன் பிற கட்சிகளில் இருந்து அக்கட்சியில் சேரும் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 1 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.  இது தேசிய அளவில் மட்டுமின்றி மா நில அளவிலும் இருக்கும் என தகவல் வெளியாகிறது.
 
சமீபத்தில், முன்னாள் மராட்டிய முதல் அமைசர் சவான், முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார்,  திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அர்ஜூன் சிங், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை சார்ந்த  வரபிரசாத் ராவ் , ஆம் ஆத்மியை சேர்ந்த சுஷில் குமார்  உள்ளிட்டோரும்  பாஜகவில் இணைந்தனர்.
 
இந்த நிலையில் இதுவரை வேறு கட்சிகளில் இருந்து 80 ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்துள்ளதாகவும், பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 1 லட்சம் தொடும் என தெரிகிறது.