திருடனை பிடிக்க ஓடியவர் .. ரயிலில் சிக்கி பலியான சோகம்
மகாராஷ்டிரா, மாநிலம் மும்பையில் வசிந்து வந்தவர் ஷகில் ஷேக் (53) .இவர் ஜோகேஷ்வரி முதல் சர்ச்கேட் நிலையத்துக்கு பயணம் செல்வதற்காக மின்சார ரயிலில் பயணம் செய்த போது, அருகில் நின்றிருந்த இளைஞன் , இவரது செல்போனை திருடிக்கொண்டு ரயிலிருந்து குதித்து ஓடினான்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட ஷகில், திருடனைப் பிடிப்பதற்காக ரயிலில் இருந்து திடீரென்று குதித்தார். வேகமாக சென்றுகொண்டிருந்ததால் நிலை தடுமாறி ரயிலுக்குக் கீழே விழுந்தார்.
இதனைப் பார்த்த மக்கள், ஷகிலை காப்பாற்றுவதற்க்காக விரைந்து சென்றனர். அதற்குள் ரயில் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்த்து குற்றவாளியைத் தேடி வருவதாகச் செய்திகள் வெளியாகிறது.