வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (20:30 IST)

காதலிக்க மறுத்த தோழியை வெட்டிக் கொன்ற நபர் கைது!

kerala vishnupriya
கேரள  மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தன்னைக் காதலிக்க மறுத்தத பெண்ணை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள  மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் விஷ்ணு பிரியாவை, சியாம் ஜி என்பவர் சுமார் 5 ஆண்டுகளாக ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால்  நண்பனாக மட்டுமே விஷ்ணு பிரியா அவருடம் பழகியுள்ளதாக தெரிகிறது.

தன் காதலை ஏற்காமல், வேறு ஒருவருடன் விஷ்ணு பிரியா பழகி வந்ததால் ஆத்திரம் அடைந்த சியாம் ஜி சுத்தியலால் விஷ்ணுபிரியாவை தாக்கியுள்ளார்.  இதில், மயங்கி விழுந்த அவரை கத்தியால் கழுத்தை அறுத்து, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்த பின், அவர் அங்கிருந்து தப்பி ஓட்டிவிட்டார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், சியயாம்ஜித் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்  கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து தலச்சேரி  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj